10:07 AM 5/5/2014
மழை தரும் சுகம்
நேற்றிலிருந்து ஆட்டம் காட்டிய வானம் ஒரு வழியாக இன்று என் ஊரில் தரை இறங்கியது . .
விடிந்தும் விடியாத காலை ,சேவல் தன் அலாரத்தை எழுப்ப ஊர் மக்கள் தன் பணிகளை செய்ய ஆயத்தம் ஆனார்கள் .
இரவு முழுவதும் எங்கள் ஊரை முற்றுகையிட்டு ,சூழ்ந்திருந்த மேகம் விடி காலைதான் தோதான நேரம் என நினைத்து
லேசாக மழை துளிகளை விசிறிவிட்டது .
மொட்டை மாடியில் சிமெண்ட் ஓடுகளின் தாழ்வில் உறங்கிக்கொண்டிருந்த நான் மழையின் வாசம் முகர்ந்து விழித்துக்கொண்டேன் .
கண்களை துடைத்துக்கொண்டு மழையை ரசிக்க அமர்ந்தேன் .
மழை என்றால் எப்படிப்பட்ட மழை , மயக்கம் என்ன படத்தின் ஆரம்ப காட்சியில் தோன்றும் இடி ,மின்னல் இல்லாத அமைதியான மழை .
தண்ணீர் குழாய்களில் இருந்த குடங்களிலும்,குண்டாண்களிலும் மழை நீர் பட்டு ,இசை எழுந்து கொண்டிருந்தது .
ஊரில் இருந்து மழையை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன .
மழையோ திருமண தம்பதியின் முதலிரவு போல மென்மையாக பெய்துகொண்டிருந்தது .
அக்கினி வெயிலில் தவித்துக்கொண்டிருந்த தரைகள் மழை அவ்வளவு பெய்தும் ஈரமே இல்லை.
திடீரென மழை கொட்டத்துவங்கியது. அரை மில்லிமீட்டர் இடைவெளியில் மழைத்துளிகள் ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்திக்கொண்டிருந்தன .
நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை ,திடீரென மழையோடு மழையாக நனைந்துகொண்டிருந்தேன் .
அந்த நிமிடங்கள் பள்ளிக்கூடத்தில் விடுமுறைக்காக பெருமழையை எதிர்பார்த்து ஏமாந்த சோகம் அப்போது மறைந்திருந்தது .
சண்டைக்கார மொட்டை மாடி என்றெல்லாம் பார்க்கவில்லை ,மழை என்றவுடன் அம்மாவின் கைபிடியை விட்டோடும் குழந்தையை போல
அடுத்தவீட்டின் மொட்டை மாடியில் எகிறிவிட்டேன் .
அந்த ஆனந்த சுகம் இரவில் தெரியும் விண்மீன்கள் அதே அளவில் நம் மீது விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி .
என்னோடு சேர்ந்து மழையில் நனைந்திருந்த தென்னையின் அடியில் போய் நின்றபோது ,
பனிசரிவில் வழுக்கி விளையாடும் விளையாட்டைபோல மழை நீர்
தென்னை இலையின் வழியே சரிந்து என் மீது குவீயலாக விழுந்தன ,அது யாராலும் தயாரிக்க முடியாத ஷவர்.
அப்படியே கையை உயரே தூக்கி முகத்தை வானுக்கு நேராக காட்டியபோது
மேகத்தால் வேயப்பட்ட கூரையிலிருந்து திரவ கற்கண்டுகள் தலையிலும்,முகத்திலும்,உடலிலும் ,உருண்டும் ,சரிந்தும் ,ஊர்ந்தும்
சொல்லக்கூடாத இடங்களில் நுழைந்தும் ,கால்களில் சரிந்தும் தரையில் விழுந்தபோது ,
இவ்வுலகின் மிகச்சிறந்த அழகியால் மசாஜ் செய்யப்பட்டது போல சுகம் சுகம் கண்டது மேனி
அந்த நேரத்தில் தான் மழை கவிதைக்கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் ,ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம் என்ற பாடலின் ஆழமான அரத்தம் விளங்கியது . பேரிரைச்சலோடு கொட்டிக்கொண்டிருந்த மழையால் அந்த மொட்டைமாடி குலமாகிபோனது . ஆழம் கணுக்காலுக்கும் கீழே இருந்தது ,அதில் படுத்து குளிக்க மனது ஆசைப்பட்டாலும் ,ஆழம் இல்லை என்பதை மூளை உணர்த்தியபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது .
சாலைகளில் நீர் வீட்டை விட்டு ஓடும் காதலன் ,காதலியை போல வாசலில் கிடந்த காலனியை இழுத்துக்கொண்டு சென்றது .
ஒரு காதலியுடன் நணைந்திருந்தால் இன்னும் சுகமாகவும் இருந்திருக்கும் ,இதை விட அழகாகவும் வர்ணித்தும் இருக்கலாம்
.

No comments:
Post a Comment