சுமார்12 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது நண்பனும்
இரும்புலிக்குறிச்சி பெரிய ஏரி அரசமரத்து கரையிலிருந்து எங்கள் வடக்கு
இரும்புலிக்குறிச்சி கிராமத்திர்க்கு பழைய சைக்கிள் டயர்களை வயல்வெளி வரப்பின்
மீது ஓட்டீ பந்தையம் வைத்து விளையாடுவோம் .பின்பு ஏரியிலிறிந்து வயலுக்கு பாசனம்
நிறுத்தப்பட்டது.காரணம் கோடைகாலங்களில் மக்கள் குளிப்பதற்க்கு நீர் இல்லாமல் போய்விடுகிறது என்பதால் பாசனத்தை
நிறுத்தினாராக்கள் என்று என் பாட்டி சொன்னார்கள்.பாசனம் நின்றதும் நெல் விவசாயமும்
நின்றுபோனது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .பின்பு நான் பள்ளி சென்ற நாட்களில் அதே
வயல்வெளியில் யுகலிப்டஸ் தோப்புக்கள் உருவானது .அதில் எங்களுக்கும் கொஞ்சம் நிலம்
இருந்தது ,நாங்களும் அதையே பயிர் செய்தோம் ,பள்ளி
நேரத்திர்க்கு முன்பாகவே கிளம்பி அந்த யுகலிப்டஸ் மரநிழல்களில் வீட்டுப்பாடம் படிப்போம் ,எழுதுவோம் ,தேர்வு நாட்களில் 8.30 மணிக்கெல்லாம்
அங்கு ஆஜராகி விடுவோம் ,நன்றாக படிப்போம் ,ஆவியம் மணி ஆவியம் ,விளையாடுவோம் ,கோலி ஆடுவோம் ,அந்த வழிபாட்டை முழுவதும் கோலி
ஆடிக்கொண்டே வீட்டுக்கு போவோம் ,இப்படி பல நன்மைகளை தந்தது அந்த
யுகலிப்டஸ் மரம் ,ஆனால்
கொஞ்சம் விவரம் தெரிய ஆரமித்தபிறகுதான் அதன் உண்மையான குணங்கள் தெரிய வந்தது.
கோடைகாலங்களில் நீர் வற்றிவிடும் என்பதர்க்காக ஆண்டுக்கு ஆண்டு பயன்தரும் நெல்
விவசாயத்தை நிறுத்திவிட்டு ,5 ஆண்டுகளுக்கு 1 முறை வருமானம்
தரும் யுகலிப்டஸ் ஐ பயிர் செய்தனர் ,ஆனால் அந்த யுகலிப்டஸ்
மரங்கள் நீரை மிகுதியாக உறிஞ்சக்கூடியவை ,மழை காலங்களில்
நீரை உறிஞ்சி கோடை காலங்களில் நீர் இல்லாமலும் வாழக்கூடியவை,இதனால்
ஏரியின் நீர் மட்டம் வெகு விரைவாக வற்றிவிடும் ,அந்த
யுகலிப்டஸ் மரங்களுக்கு பதிலாக அந்த நிலங்களை பயன்படுத்தி வேறு ஏதாவது பயன் தரும்
வேளாண்மைகளை செய்ய அறிவுறுத்தலாம் ,இதை இளைஞ்சர்கள் நாங்கள்
சொன்னால் எடுபடாது ,இதற்க்கு
அரசின் உதவியும் தேவை ,மாறுவது கடினம் தான் ,ஆனால் மாறிதான் ஆகவேண்டும் ,பல ஊர்களில்
விவசாயத்திர்க்கு நிலம் இல்லாமல் விவசாயம் நின்றது ,ஆனால்
மகசூல் அதிகம் தரக்கூடிய வளமான நிலங்கள்
இருந்தும் விவசாயம் செய்யாமல் இருக்கலாமா ?இதை பற்றி
சிந்திக்காமல் இருக்கலாமா?
No comments:
Post a Comment