Monday, November 4, 2013

அமுது படையல்

இந்த கட்டுரையை எழுதும் அளவுக்கு தகுதி எனக்கு இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது ,இருந்தும்  எழுத வேண்டும் என்று ஒரு நாட்டம் இருந்தது ,என்ன ஆனாலும் பரவாயில்லை எழுதிவிடலாம் என  முடிவு செய்து விட்டேன் ,இதை படித்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள்,தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் . .
ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் தொடர்பு கொண்ட குடும்பங்களுக்கு மட்டும் அது விழா ,ஒரு தனி நபருக்கு பிறந்த நாள் என்றால் அது அவருக்கு மட்டும் விழா ,ஆனால் ஒரு ஊரே விழாக்கோலம் பூண்டு இருப்பது அந்த ஊரின் கோவில் திருவிழாவாகத்தான் இருக்க முடியும் .அப்படி மொத்த இரும்புலிக்குறிச்சியே விழாக்கோலம் பூண்ட நாள் , இரும்புலிக்குறிச்சியின் அடையாளமாம் அமுதுபடையல் திருவிழா .பல ஊர்களில் இருக்கும் சொந்த பந்தங்கள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்னதாகவே வந்து விடும் நாள் .முந்திரி அறுவடை காலம் என்பதால் பணத்திர்க்கும் பஞ்சம் இருக்காது .கால் நடும் நாளில் தொடங்கும் எதிர்பார்ப்பு ,பந்தல் போடும்  நாட்களில் எகிறும் ,அது மட்டுமல்லாமல் பணம் சேமிப்பும் சத்தமில்லாமல் நடக்கும் .ஒரு வழியாக அமுது படையல் வந்தாகிவிட்டது .அமுது படையளின் சிறப்புகளில் ஒன்று!,,, மாரி அம்மன் கோவிலில் தொடங்கும் கடைகள் எரிக்கரையில் போயி ஐக்கியமாவதுதான்  .அனைத்து தரப்பினரையும் கவரும் பொருட்கள் விர்ப்பனைக்கு வரும். .விழா நாள் அன்று சாமியார் ஆசி வழங்க புறப்படுவார் ,மேல தாளம் முழங்கும்  சத்தம் கேட்கும் ,அதை வைத்து சாமியார் வருகிறார் என்று ஊர் மக்கள் பால்,மோர் ஐ காணிக்கையாக செலுத்திவிட்டு ஆசி பெருவார்கள் ,ஊரை சுற்றி முடித்துவிட்டு கோவிலுக்கு செல்வதற்க்குள் மணி3 ஆகிவிடும் ,அடுத்து அம்மன்  உலா.,, ,கிழக்கே எரிக்கரையில் ஆரமித்து மேற்க்கே உள்ள கோவிலுக்கு செல்லும் பவணி உலா  .இதை நான் என்  மாமா வீட்டு மொட்டை மாடியில் நின்று சிறு வயதில் ஆவலுடன் பார்ப்பேன் .அடுத்த நிகழ்ச்சி அன்னம் வழங்குதல் முதல் நாள் இரவே ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி காய்கறி நறுக்குதல் ,அடுப்பு அமைத்தல் ,அன்னதானத்திர்க்கு தேவையான அனைத்து வேலைகளையும் ஒன்றாக பார்ப்பார்கள் .,அது மறு நாளும் தொடரும்  .அன்னத்தை அம்மனுக்கு படைத்து விட்டு  மக்களுக்கு வழங்கும் போது அது அமிர்தமாக மாறிவிடும் .அதுவேதான் எங்கள் அமுது படையல் .அடுத்ததாக அன்னம் சாப்பிட்டு முடித்துவிட்டு ,ஊரிலிருந்து வந்திருக்கும் அத்தை மகள்கள்,மாமன் மகள்கள் ஐ பார்ப்பதற்க்கு கோவிலிலிருந்து எரிக்கரைக்கு ஒரு ரவுண்டு ,பொண்ணுங்க நிக்கிற கடைகள்ள போயி ஏதாவது பொருளை விலைபேசி விட்டு அவர்கள் போனவுடன் அவர்கள் பின்னாலயே ஒரு ரவுண்டு என மொத்தம் கிழக்கும் ,மேற்க்கும் என 9 ரவுண்டு ,நீங்கள் என்னை பார்க்கவேண்டுமானால் அந்த கூட்டத்தை உற்று நோக்கினால் நண்பர்களுடன் நான் நடப்பது தெரியும் .இறுதியாக வீட்டிர்க்கு 2 சீப்பு வாழைப்பழம் ,10 ரூபாய்க்கு பொறி ,வாங்கிக்கொண்டு அந்த மை இருட்டில் வீட்டிர்க்கு நடந்து வரும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது ,அடுத்து வீட்டில் சாப்பிட்டு முடித்துவிட்டு நண்பர்களுடன் நாடகம் பார்க்க கிளம்புவேன் ,இதுதான் விழாவின் உச்சக்கட்டம் ,என்னதான் இன்று ஹாலிவுட் ,பாலிவுட் ,கோலிவுட் என்று மக்கள் திரைப்படம் பார்க்க ஆரமித்திருந்தாலும் நாடகத்திர்க்கு உள்ள மவ்ஸ் குறையாமல் இருப்பதை இரும்புலிக்குறிச்சியில் காணலாம் .விழாவுக்கு முந்திய இரவு ,விழா அன்று ,அடுத்த நாள் என  3 நாட்கள்  சிறுதொண்ட நாயனாரின் நாடகம் நடைபெறும் .அதில் 3ஆம் நாள் இரவான பிள்ளைகறி படைக்கும் காட்சி(பிள்ளையாக நடிப்பது எனது சிநேகிதன் முகிலன் ) அற்புதமாக அரங்கேறும் ,அதில் படைக்கும் மாவை குழந்தை வரம் இல்லாதோர் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் இவை போதாது என்று இளைஞ்சர்களை கவரும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியும் நடைபெறும் .. இப்படியே அந்த 3 நாட்களும் கார்முகிலின் ஊடே செல்லும் விமானம் போல ஆரவாரமாய் கழியும் ,,,,வந்து பாருங்கள் எங்கள் வங்க கடலுக்கு .,...

Saturday, November 2, 2013

நீரும் யுகலிப்டஸ் மரமும் ,நானும் ,எனது ஊரும் .

சுமார்12 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது நண்பனும் இரும்புலிக்குறிச்சி பெரிய ஏரி அரசமரத்து கரையிலிருந்து எங்கள் வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்திர்க்கு பழைய சைக்கிள் டயர்களை வயல்வெளி வரப்பின் மீது ஓட்டீ பந்தையம் வைத்து விளையாடுவோம் .பின்பு ஏரியிலிறிந்து வயலுக்கு பாசனம் நிறுத்தப்பட்டது.காரணம் கோடைகாலங்களில் மக்கள் குளிப்பதற்க்கு நீர்  இல்லாமல் போய்விடுகிறது என்பதால் பாசனத்தை நிறுத்தினாராக்கள் என்று என் பாட்டி சொன்னார்கள்.பாசனம் நின்றதும் நெல் விவசாயமும் நின்றுபோனது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .பின்பு நான் பள்ளி சென்ற நாட்களில் அதே வயல்வெளியில் யுகலிப்டஸ் தோப்புக்கள் உருவானது .அதில் எங்களுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது ,நாங்களும் அதையே பயிர் செய்தோம் ,பள்ளி நேரத்திர்க்கு முன்பாகவே கிளம்பி அந்த யுகலிப்டஸ் மரநிழல்களில்  வீட்டுப்பாடம் படிப்போம் ,எழுதுவோம் ,தேர்வு நாட்களில் 8.30 மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகி விடுவோம் ,நன்றாக படிப்போம் ,ஆவியம் மணி ஆவியம் ,விளையாடுவோம் ,கோலி ஆடுவோம் ,அந்த வழிபாட்டை முழுவதும் கோலி ஆடிக்கொண்டே வீட்டுக்கு போவோம் ,இப்படி பல நன்மைகளை தந்தது அந்த  யுகலிப்டஸ் மரம் ,ஆனால் கொஞ்சம் விவரம் தெரிய ஆரமித்தபிறகுதான் அதன் உண்மையான குணங்கள் தெரிய வந்தது. கோடைகாலங்களில் நீர் வற்றிவிடும் என்பதர்க்காக ஆண்டுக்கு ஆண்டு பயன்தரும் நெல் விவசாயத்தை நிறுத்திவிட்டு ,5 ஆண்டுகளுக்கு 1 முறை வருமானம் தரும் யுகலிப்டஸ் ஐ பயிர் செய்தனர் ,ஆனால் அந்த யுகலிப்டஸ் மரங்கள் நீரை மிகுதியாக உறிஞ்சக்கூடியவை ,மழை காலங்களில் நீரை உறிஞ்சி கோடை காலங்களில் நீர் இல்லாமலும் வாழக்கூடியவை,இதனால் ஏரியின் நீர் மட்டம் வெகு விரைவாக வற்றிவிடும் ,அந்த யுகலிப்டஸ் மரங்களுக்கு பதிலாக அந்த நிலங்களை பயன்படுத்தி வேறு ஏதாவது பயன் தரும் வேளாண்மைகளை செய்ய அறிவுறுத்தலாம் ,இதை இளைஞ்சர்கள் நாங்கள் சொன்னால் எடுபடாது  ,இதற்க்கு அரசின் உதவியும் தேவை ,மாறுவது கடினம் தான் ,ஆனால் மாறிதான் ஆகவேண்டும் ,பல ஊர்களில் விவசாயத்திர்க்கு நிலம் இல்லாமல் விவசாயம் நின்றது ,ஆனால் மகசூல் அதிகம் தரக்கூடிய வளமான  நிலங்கள் இருந்தும் விவசாயம் செய்யாமல் இருக்கலாமா ?இதை பற்றி சிந்திக்காமல் இருக்கலாமா?