Sunday, October 27, 2013

நானும் என் மனமும்

நான் இரும்புலிக்குறிச்சியின் ஒரு தொண்டன் :என்னை பற்றி ,நான் இப்போது இருக்கும் நிலைமை பற்றி தெளிவாக சொல்ல வேண்டும் ,ஏனென்றால் இன்னும் 10 வருடம் கழித்து இதை படிக்கும் பொது நான் எப்படி இருந்தேன் என்றுஉங்களுக்கு தெரிய வேண்டும் .
·         என்னை நினைத்து பார்க்கையில் எனக்கே கேவலமாக உள்ளது. .நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? .உலகத்தில் மிகப்பெரிய சோம்பேறியாக உள்ளவன் நான் .என் வேலைகளை பிறரை செய்ய சொல்லி கெஞ்சுகிறேன் .,எந்த வேலையாக இருந்தாலும் அதில் மிகப்பெரிய அலட்சியம் காட்டுகிறேன் ,என்னையே நான் பெரிய ஆள் என்று நினைக்கின்றேன் ,எந்த துறையிலும் நான் திறைமை சாலி இல்லை என்பதை  மறந்து ,என் நண்பனிடம் தோர்க்க கூடாது என்பதர்க்ககாக என்னால்  முடியாத போட்டியிலும் பங்கு பெற்று தோல்வி அடைகிறேன் .சினிமாவில் மிகப்பெரிய திறமை இருப்பதாக எண்ணி என் படிப்பை வீணடித்துக்கொண்டு இருக்கின்றேன் ,,யார் என்றே தெரியாத பெண்ணிடம் மணிக்கணக்ககா பேசிக்கொண்டு இருக்கின்றேன் .அவள் பேசவில்லை என்றால் வெட்க்கத்தை விட்டு நானே அவளிடம் தானாக பேசுகிறேன் .
·         என் படிப்புக்கு சம்மந்தமே இல்லாத கம்ப்யூட்டர் ஐ  வைத்துக்கொண்டு என் நாட்களை வீணாக கடத்திக்கொண்டு இருக்கின்றேன் ..அவற்றை மறந்து இருக்கலாம் என்றால் முடியவில்லை .சமீப காலமாக கதைகளின் மீதும் ,எழுத்தின்  மீதும் அதீத ஆசை ஏற்ப்பட்டு பாட புத்தகம் படிக்க வேண்டிய நேரத்தில் சுஜாத்தாவின் ரத்தம் ஒரே நிறம் நாவல் படித்துக்கொண்டு இருக்கின்றேன் ?
·         நான் யார் ?எதர்க்காக நான் இப்படி இருக்கின்றேன் ?நான் யாரால் இப்படி மாறினேன் ?என் எதிர்காலம் என்ன ?இப்போது கூட 4 நாட்களில் 9 ரெகார்ட் வைக்க வேண்டும் ,ஆனால் என்னை பற்றி நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன் ??????????????
·         என் நண்பர்கள் தான் என்னை மாற்றினார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடுயும்.மாற்றத்திர்க்கு இடம் கொடுத்தது நான்தான் ,அதர்க்காண தண்டனையை இன்னும் 24 மணி நேரத்தில் அனுபவிக்க போகிறேன் .நான் ஏமாறப்போகிறேன் ,என்னுடைய எல்லா தோல்விக்கும் நானே காரணம் இத்தனை கேள்விகளுக்கும் உங்களால் விடை சொல்ல முடியுமா ?அண்ணா .நான் இதை உங்களிடம் சொல்வதற்க்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை ஏதோ சொல்லணும் போல தோன்றியது

No comments:

Post a Comment